undefined

பெரும் அதிர்ச்சி.. விடுதி அறையில் ட்ரிப்ஸ் ஏற்றியபடி சடலமாக கிடந்த நர்சிங் மாணவி!

 

தலைநகர் டெல்லியின் நியூ அசோக் நகர் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 22 வயது நர்சிங் மாணவி மயங்கி கிடப்பது குறித்து போலீசாருக்கு தகவல் வந்தது.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அறை பூட்டியிருப்பதை கண்டு கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது செவிலியர் மாணவி படுக்கையில் இறந்து கிடந்தார்.

பின்னர் ஒரு 2-ட்ரிப்ஸ் பாக்கெட் சீலிங் பேனிலிருந்து தொங்கவிடப்பட்டு, அவளது கையில் ஒரு ஊசி இணைக்கப்பட்டு, ட்ரைப்ஸ் ஏற்றப்பட்டு வந்தது. இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தற்கொலையாக இருக்கலாம் என  போலீசார் சந்தேகிக்கின்றனர்.

எனினும் சம்பவ இடத்தில் தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. விடுதியில் நர்சிங் மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

 பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!