பெரும் அதிர்ச்சி.. ஆண், பெண்ணை கடத்தி கொடூரக் கொலை.. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!
தர்மபுரி அருகே, சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில், 55 வயது மதிக்கத்தக்க ஆண், பெண் இருவரை, மர்ம கும்பல், கத்தியால் குத்தி, கழுத்தை நெரித்து கொன்று விட்டு, தப்பிச் சென்றது. மர்ம கும்பலை பிடிக்க டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை தடங்கம் அருகே வெத்தலக்காரன்பள்ளம் செங்காலம்மன் கோவில் அருகே புதிதாக அமைக்கப்பட்ட சிப்காட் தொழிற்பேட்டையில் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 50 வயது பெண் இருவரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது.
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சடலங்கள் யார்? அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, 2 பேரின் உடல்களையும் போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த தர்மபுரி மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. மேலும், தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.
கொலை செய்யப்பட்ட நபர் காவி நிற பேண்ட் மற்றும் வெள்ளை சட்டை அணிந்திருந்தார். அவரது மார்பு மற்றும் வயிற்றில் 5 கத்திக்குத்து காயங்கள் இருந்தன. முதுகில் கத்தியால் குத்திய காயங்களும் இருந்தன. மேலும், அவரது கழுத்தில் பெல்ட்டால் குறிக்கப்பட்டிருந்தது. மேலும், அடையாளம் தெரியாத அளவுக்கு முகம் சிதைந்திருந்தது. அவரது இடது காலில் ஒரு செருப்பும், சடலத்தின் அருகே மற்றொரு செருப்பும் கிடந்தன.
அதேபோல், கொலை செய்யப்பட்ட பெண் பச்சை நிற சேலையும், சிவப்பு நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். அவருக்கு மார்பில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. மேலும், சேலையால் கழுத்தை நெரித்துள்ளனர். அவருடைய ஆடைகள் கலைந்திருந்தன. இதனால், அவர் கொலை செய்யப்படுவதற்கு முன் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இருவரையும் வெவ்வேறு இடத்தில் வைத்து கொடூரமாக கொன்ற மர்ம கும்பல், அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்து காரில் அழைத்து சென்று விட்டு சென்றது தெரியவந்தது. பலியானவர்கள் தம்பதிகளா அல்லது கள்ளத்தொடர்பு காதல் ஜோடியா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 4 கொலைச் சம்பவங்கள் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!