undefined

பெரும் அதிர்ச்சி.. மலேசிய தொழிலதிபர் காலமானார்!

 

மலேசியாவின் பிரபல தொழிலதிபர் ஆனந்த கிருஷ்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 86. மலேசியாவில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஆனந்த கிருஷ்ணன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர். ஆஸ்திரேலியாவிலும் பின்னர் அமெரிக்காவிலும் படித்து பட்டம் பெற்றார். சிறு வயதிலிருந்தே பல்வேறு தொழில்களை தொடங்கி மலேசியாவின் நான்காவது பெரிய பணக்காரராகும் அளவுக்கு சொத்துக்களை குவித்தார்.

இவரது சொத்து மதிப்பு 45 ஆயிரம் கோடி ரூபாய். தொலைத்தொடர்பு, செயற்கைக்கோள், எண்ணெய், ரியல், எஸ்டேட், எரிவாயு என பல்வேறு துறைகளில் வணிகம் செய்தவர் ஆனந்த கிருஷ்ணன். கலை, கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளுக்கு ஏராளமான நன்கொடைகளை வழங்கியுள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவரது மகன் வென் அஜான் சிரிபான்யோ சில வருடங்களுக்கு முன்னர் பௌத்த துறவியானார் என்பது குறிப்பிடத்தக்கது. 86 வயதான ஆனந்த கிருஷ்ணன் நேற்று கோலாலம்பூரில் காலமானார். அவரது மறைவுக்கு பல தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆனந்த கிருஷ்ணன், தனது மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மூலம், இந்தியாவில் அப்போதைய பிரபல மொபைல் நிறுவனமான ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார். பின்னர், இந்த முதலீடு அவருக்கு பெரும் தலைவலியாக மாறியது. அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டார். ஆனந்த கிருஷ்ணன் அரசியல் அச்சுறுத்தல்களை சமாளித்து திறம்பட வியாபாரம் செய்தவர் என்கின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!