undefined

பெரும் அதிர்ச்சி.. கல்லூரி விடுதியில் ஐ.பி.எஸ் அதிகாரி மகள் தீடீர் மரணம்!

 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோகியா சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை விடுதி அறையில் மயங்கிய நிலையில் மாணவி கண்டுபிடிக்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உண்மை தெரியவரும்.

உயிரிழந்த மாணவி ஐபிஎஸ் அதிகாரியின் மகள் அனிகா ரஸ்தோகி (வயது 19) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது தந்தை தேசிய புலனாய்வு அமைப்பில் ஐஜியாக உள்ளார். அனிகா சட்டப் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு எல்எல்பி படித்து வந்தார். ராம் மனோகர் லோகியா தேசிய சட்டப் பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்தார்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், அனிகா சனிக்கிழமை மாணவர்களுடன் வழக்கு கலந்தாய்வில் கலந்துகொண்டதாகவும், இரவு உணவு சாப்பிட்டுவிட்டு இரவு 9 மணியளவில் தனது அறைக்கு தூங்கச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது. ஒரு மணி நேரம் கழித்து இரவு 10 மணியளவில் அவரது தோழி அறைக்கு வந்தபோது, ​​கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது. கதவைத் தட்டி அழைத்துள்ளார், ஆனால் பதில் இல்லை. பின்னர், விடுதியில் இருந்த மற்ற மாணவர்களின் உதவியுடன் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, ​​அனிகா மயங்கிக் கிடப்பதைக் கண்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விடுதி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. சட்டப் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் சசாங்க் சேகர் கூறுகையில், "முதற்கட்ட விசாரணையில், அனிகாவின் மரணம் மாரடைப்பால் ஏற்பட்டதாகத் தெரிகிறது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே முழு விவரம் தெரியவரும்" என்றார். தகவல் அறிந்த அனிகாவின் தந்தை சந்தோஷ் ரஸ்தோகி  உடனடியாக லக்னோவுக்கு விரைந்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை