undefined

பெரும் அதிர்ச்சி.. பிரதமர் மோடி புகைப்படம் போட்ட கவர் மற்றும் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

 

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசு பொருட்கள் போன்றவற்றை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

 இந்நிலையில், திருச்சி மாவட்டம் கல்லக்குடி டோல்கேட் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாஜக கொடியை ஏற்றிய காரில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகநாதன், சிவலிங்கம் ஆகியோரும் காரில் திண்டுக்கல் நோக்கிச் சென்றனர்.

தேர்தல் பறக்கும் படையினர் காரை மறித்து சோதனை செய்தனர். அதில் முறையான ஆவணங்கள் இல்லாத ரூ.75,860 ரொக்கம் மற்றும் பிரதமர் மோடியின் படம் பொறிக்கப்பட்ட கவரையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்