undefined

பெரும் அதிர்ச்சி.. சாலையோர மரத்தில் கார் மோதி கோர விபத்து.. தந்தை, மகன் பரிதாபமாக பலி!

 

அரியலூர் மாவட்டம், சுண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (56). இவர் கடந்த 35 ஆண்டுகளாக சென்னை வியாசர்பாடியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அரியலூர் மாவட்டம் கடம்பூருக்கு தனது மனைவி மாலதி (50), மகன் விக்னேஷ் (30), மருமகள் ஜெயலட்சுமி (26) ஆகியோருடன் காரில் வந்துள்ளார்.

அங்குள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு இன்று தனது மகள் புனிதவள்ளியின் குழந்தைகள் தினேஷ் (8), சகானா (6) ஆகியோரை காரில் ஏற்றிக்கொண்டு தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு  புறப்பட்டார். திருமானூர் அருகே சத்திரத்தேரி பகுதியில் கார் வந்தபோது, ​​எதிர்பாராதவிதமாக சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரை ஓட்டி வந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பலத்த காயமடைந்த விக்னேஷ், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மேலும், காயமடைந்த மாலதி, ஜெயலட்சுமி, தினேஷ், சகானா ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!