undefined

பெரும் ஷாக்.. தனியாக வசித்து வந்த மூதாட்டி.. கை.கால்களை கட்டி மர்ம நபர்கள் செய்த கொடூரம்!

 

திருப்பூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரணம்பேட்டை பகுதியில் தனியாக வசித்து வந்த 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் இன்று மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். போலீஸ் விசாரணையின் முதல் கட்ட விசாரணை வெளியாகியுள்ளது.

அதன்படி தனியாக இருந்த மூதாட்டியை மர்ம கும்பல் கும்பல் கை, கால்களை கட்டி, கண்ணில் மிளகாய் பொடி தூவி சித்ரவதை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், மூதாட்டியைக் கொன்று நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் தகவல்களையும் சேகரித்து வருகின்றனர். திருப்பூரில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையின் பின்னணியில் வடமாநில கொள்ளையர்கள் இருக்கலாம் என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!