பெரும் சோகம்.. துப்பாக்கியை சுத்தம் செய்த போது தவறுதலாக பாய்ந்த குண்டு.. இந்திய மாணவர் பலி!
அமெரிக்காவின் அட்லாண்டாவில் படிக்கும் இந்திய மாணவர் ஆர்யன் ரெட்டி (வயது 23) பிறந்தநாள் விழாவின் போது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். கன்சாஸ் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் படிக்கும் முதுகலை மாணவர் ஆர்யன், சமீபத்தில் தான் வாங்கிய துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது தவறுதலாக சுட்டதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு அவரது அறைக்கு வந்த ஆர்யனின் நண்பர்கள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆர்யன் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தெலுங்கானா மாநிலம் புவனகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆர்யன் ரெட்டி . இவரது குடும்பம் தற்போது உப்பல் மாவட்டத்தில் வசிக்கின்றனர்.
ஆர்யனின் மரணம் குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்யன் இன்று தனது பெற்றோரை பார்க்க வருவதாக கூறியிருந்தார். மகனைக் காண மகிழ்ச்சியில் இருந்த பெற்றோரிடம், அவரது உடல் ஒப்படைக்கப்படவுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!