undefined

பெரும் சோகம்.. தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

 

திருப்பத்தூர் மாவட்டம், கதிரிமங்கலத்தை அடுத்த ராஜாகவுண்டர் வட்டம் சேர்ந்தவர் ஞானசேகர். அசின் என்பவருடன் திருமணமாகி, அஷ்வந்த் (3), ரிஷிவந்த் ஒன்றரை வயதில் என இரண்டு மகன்கள் உள்ளனர்.இந்நிலையில், ஞானசேகர் வீட்டின் அருகே, மற்றொரு புதிய வீடு கட்டி வருகிறார்.அசின், இன்று வழக்கம் போல், முதல் குழந்தையை பள்ளிக்கு அழைத்து சென்றார்.

பின்னர், புதிதாக கட்டப்பட்ட வீட்டில் ஞானசேகர் வேலை செய்து வந்துள்ளார். அப்போது தனியாக இருந்த ஒன்றரை வயது சிறுவன் ரிஷிவந்த், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்தார். பல்வேறு இடங்களில் நீண்ட நேரம் தேடியும் குழந்தையை காணாததால் தண்ணீர் தொட்டிக்குள் புகுந்து பார்த்தபோது ரிஷிவந்த் கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் ரூரல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யாரும் இல்லாத நேரத்தில் புதிதாக கட்டப்பட்ட வீட்டில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குழந்தை இறந்ததால் பெற்றோர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சை பதறவைத்தது...

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!