undefined

பெரும் சோகம்... பீகாரில் 'ஜிவித்புத்ரிகா' திருவிழாவில் ​​37 குழந்தைகள் உட்பட 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு! முதல்வர் ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

 

பீகாரில் 'ஜிவித்புத்ரிகா' திருவிழாவின் போது தனித்தனி சம்பவங்களில் ஆறுகள் மற்றும் குளங்களில் புனித நீராடும் போது 37 குழந்தைகள் உட்பட 43 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த திருவிழாவின் போது 43 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3 பேர் காணாமல் போனதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது .

நேற்று செப்டம்பர் 25ம் தேதி நடைபெற்ற திருவிழாவின் போது மாநிலத்தின் 15 மாவட்டங்களில் இந்த துயர சம்பவங்கள் நடந்துள்ளன. 

'ஜிவித்புத்ரிகா' பண்டிகையின் போது, ​​பெண்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக விரதம் இருந்து வந்த நிலையில் இருவரும் நீர்நிலைகளில் புனித நீராடுகிறார்கள்.

"இதுவரை மொத்தம் 43 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது என்று பேரிடர் மேலாண்மைத் துறை (டிஎம்டி) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இறந்தவர்களின் உறவினர்களுக்கு முதல்வர் நிதிஷ் குமார் ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்தார். .

நிவாரணம் வழங்குவதற்கான செயல்முறை தொடங்கியுள்ளது மற்றும் உயிரிழந்த 8 பேரின் குடும்ப உறுப்பினர்கள் ஏற்கனவே அதைப் பெற்றுள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் மேற்கு சம்பரான், நாளந்தா, அவுரங்காபாத், கைமூர், பக்சர், சிவான், ரோஹ்தாஸ், சரண், பாட்னா, வைஷாலி, முசாபர்பூர், சமஸ்திபூர், கோபால்கஞ்ச் மற்றும் அர்வால் மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!