undefined

பெரும் பரபரப்பு.. காவிரி ஆற்றில் மிதந்து வந்த ராக்கெட் லாஞ்சர்.. பீதியில் மக்கள்!

 

திருச்சி அருகே காவிரி ஆற்றில் மிதந்த ராக்கெட் லாஞ்சரை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள அந்தநல்லூர் சிவன் கோயில் காவிரி படித்துறையில் நேற்று மக்கள் நீராட சென்றனர். கரையில் ராக்கெட் லாஞ்சர் தண்ணீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று தண்ணீரில் இருந்து சுமார் மூன்றடி நீளமுள்ள ராக்கெட் லாஞ்சரை கைப்பற்றி பாதுகாப்பாக மண்ணில் புதைத்தனர்.

மேலும் ராக்கெட் லாஞ்சர் இங்கு எப்படி வந்தது, இதற்கு முன் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் வந்து ராக்கெட் லாஞ்சரை ஆய்வு செய்கின்றனர். பின்னர், அதை ஒரு இடத்தில் வைத்து செயலிழக்கச் செய்வார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். கடந்த மாதம் 30ம் தேதி ஜீயபுரம் பகுதியில் ராக்கெட் லாஞ்சர் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக ராக்கெட் லாஞ்சர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!