undefined

பெரும் பரபரப்பு.. வீட்டில் பதுக்கி வைத்திருந்த 64 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

 

குமரி மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகள், பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் போதைப் பொருள் பொட்டலங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து தோட்டவரம், குன்னத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்று காலை புதுக்கடை காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையில் அங்கு சோதனை நடத்தினர். அப்போது, ​​கிருஷ்ணகுமார் (38) என்பவரது வீட்டில் 56.25 கிலோ புகையிலை பாக்கெட்டுகள், 8 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுக்கள் என மொத்தம் 64 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.36,400 ஆகும். இவற்றுடன் கிருஷ்ணகுமார் வைத்திருந்த ரூ.8,110 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் புதுக்கடை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக கிருஷ்ணகுமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!