undefined

வெளிமாநில ஆம்னி பேருந்துகளுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவுகள்!!

 

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே  உள்ளன.  பட்டாசு, புத்தாடை கொண்டாட்டங்கள் ஷாப்பிங் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி ரயில்களிலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும் தங்களின் பயணத்தை மேற்கொள்ள முன்பதிவு டிக்கெட் வசதிகளை  மேற்கொண்டு வருகின்றனர்.பண்டிகை காலங்களின் போது ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிப்பதாக அடிக்கடி புகார்கள் எழுவதும், அந்த  ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி வருகிறது.

அந்த வகையில் தீபாவளி பண்டிகையின் போது அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என ஏற்கனவே தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள்   டிசம்பர்   16ம் தேதிக்கு பின்னர் தமிழகத்தில் இயங்க அனுமதி இல்லை என்று போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதோடு கூடுதல் கட்டணம் வசூலித்தால் அந்த ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்வோம் என்றும் போக்குவரத்துத்துறை மற்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!