undefined

17,000 வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கி மத்திய அரசு அதிரடி!

 

பல்வேறு இணைய குற்றங்களில் ஈடுபட்ட 17,000 வாட்ஸ்அப் கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து மோசடியாக செயல்படும் வாட்ஸ்அப் கணக்குகளை இந்தியாவின் சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்க 17,000 வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இந்த வாட்ஸ்அப் கணக்குகள் கம்போடியா, மியான்மர், லாவோஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து செயல்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் தளங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், மோசடி செய்ய உதவிய வாட்ஸ்அப் கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான கணக்குகளை கண்டறிந்த மத்திய அரசு, அவற்றை முடக்க வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அமலாக்கத்துறை அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து டிஜிட்டல் மோசடி செய்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2024 முதல் 10 மாதங்களில் மட்டும் ரூ.20,140 கோடி மோசடி நடந்துள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!