தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு அரசு கடும் எச்சரிக்கை!

 

தமிழகத்தில் பள்ளி ஆண்டு தேர்வுகள் முடிவடைந்து, கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தற்போது கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கோடை முடிந்த பின்னரும் வெயில் பல மாவட்டங்களிலும் வாட்டி வதைத்து வந்ததால், பள்ளிகள் திறப்பை  ஜூன் 10ம் தேதிக்கு மாற்றி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அரசு அறிவித்த தேதியில் தான் பள்ளிகளை திறக்க வேண்டும் எனவும், அரசின் உத்தரவை மீறி முன்கூட்டியே தனியார் பள்ளிகள் மாணவர்களை பள்ளிக்கு வரச் சொன்னால், தனியார் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


அதே போன்று அரசின் உரிய அனுமதி பெற்று தான் பள்ளி வாகனங்களை இயக்க வேண்டும் எனவும், அரசின் உத்தரவை மீறி பள்ளி வாகனத்தை இயக்கினால் பள்ளி வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!