undefined

செம... அரசுப் பேருந்துகள்  பள்ளி விடும் நேரத்திற்கு ஏற்ப  நேர மாற்றம்!

 

 தமிழகம் முழுவதும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய பாஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகள் தொடங்கப்பட்டு விட்டதால் பள்ளி தொடங்கும் நேரம், மாலை பள்ளி விடும் நேரங்களில் பேருந்துகளில் மாணவ மாணவிகள் கூட்டம் அலைமோதுகிறது. அந்த வகையில் திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி  கிராமங்களிலும் தங்கி, மக்களின் குறைகளை கேட்டு தீர்வு அளிக்கும் நிகழ்ச்சியை நடத்தினார்.

இந்நிகழ்ச்சியில்  அருங்குன்றம் மற்றும் திருநிலை கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கள் பகுதிக்கு இயக்கப்படும் தடம் எண்.டி.31 என்ற நகரப்பேருந்து பள்ளி முடிவடையும் நேரத்தில் இயக்கப்படாமல் வேறு நேரத்தில் இயக்கப்படுவதாகக் கூறினர்.   இதனால் பள்ளி விட்டதும் வீட்டுக்கு நடந்தும் ஆட்டோவிலும் செல்ல வரவேண்டிய நிலையுள்ளது. இந்த பேருந்தை திருப்போரூர் வரை நீட்டித்து பள்ளி முடியும் நேரத்தில் இயக்கவேண்டும் என மாணவர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.  இதன் பேரில்  எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி, போக்குவரத்துக்கழக அதிகாரிகளுடன் பேசி (தடம் எண் டி.31) நகர பேருந்தை திருக்கழுக்குன்றத்தில் இருந்து திருப்போரூர் வரை நீட்டிக்க உத்தரவிட்டார்.

அத்துடன் அந்த பேருந்தை பள்ளி முடியும் நேரத்தில் இயக்கவும் கேட்டுக்கொண்டார். அதன்படி அருங்குன்றம், திருநிலை, மானாம்பதி வழியாக இயக்கப்பட்டு வந்த நகர பேருந்து திருப்போரூர் வரை நீட்டிக்கப்பட்டு பள்ளி முடியும் நேரத்தில் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வு மாணவர்கள், பெற்றோரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  சட்டமன்ற உறுப்பினர் பாலாஜிக்கு அப்பகுதி மாணவர்களும் பொதுமக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!