undefined

கட்டுப்பாட்டை இழந்து இனிப்பு கடைக்குள் சொருகிய அரசு பேருந்து.. பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

 

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த அரசுப் பேருந்து பிரேக் போடாததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிலையம் எதிரே உள்ள கடையின் மீது மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. திண்டுக்கல் மாநகராட்சியின் மையப்பகுதியில் காமராஜர் பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான உள்ளூர்  பேருந்துகள் வந்து செல்கின்றன.

இதேபோல் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். நகரில் உள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த அரசுப் பேருந்து பிரேக் போடாததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிலையம் எதிரே உள்ள கடைக்குள் புகுந்தது. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று மதியம் பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று தேனிக்கு புறப்பட்டது. பஸ்சை சுப்ரமணி என்ற டிரைவர் ஓட்டி வந்தார்.

பிளாட்பாரத்தை விட்டு வெளியே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிரே இருந்த இனிப்புக் கடைக்குள் பிரேக் போடாமல் புகுந்தது. இதனால் கடைக்குள் இருந்த பிரியா என்ற பெண் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, அருகில் இருந்தவர் உதவியுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் கடையில் இருந்த கண்ணாடி பொருட்கள் மற்றும் இனிப்புகள் அனைத்தும் சேதமடைந்தன.

இந்நிலையில், பயணிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அரசு பேருந்து மீண்டும் பேருந்து நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், அரசு பஸ்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், பல்வேறு இடங்களில் பழுதடைந்து நிற்பதால், இதுபோன்ற விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!