திடீரென காணாமல் போன அரசு பேருந்து.. கை வரிசை காட்டிய மர்ம நபர்கள்!

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு பஸ் பணிமனை இரவு நேரத்தில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அனைத்து அரசு பஸ்களும் அருகில் உள்ள பட்டுக்கோட்டை ரோட்டில் வரிசையாக நிறுத்தப்படுகிறது. அதிகாலையில் இருந்து ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுனர்களால் இயக்கப்படும்.

நேற்று இரவு வழக்கம் போல் பஸ்களை சாலையோரம் நிறுத்திவிட்டு டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிமனையில் ஓய்வெடுக்க சென்றனர். இந்நிலையில், இன்று காலை திருவாடானை நோக்கி வந்து கொண்டிருந்த ஓரியூர் அருகே வண்டத்தூர் கிராமத்தில் பிரதான சாலையில் சென்ற அரசு பேருந்து, லாரி மீது மோதியது. சத்தம் கேட்டு கிராம மக்கள் பார்த்தபோது, லாரி ஓட்டுநருக்கு காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்குள்ளான பேருந்து அறந்தாங்கியில் இருந்து திருவாடானை நோக்கிச் சென்ற அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் இந்த பேருந்தை ஓட்டியது யார் என்பது தெரியவில்லை. உடனடியாக டிப்போவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை நோக்கிச் செல்லும் பேருந்து காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.

பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை கடத்தியது யார் என்பது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் பேருந்து கடத்தப்பட்டதால் ஏற்பட்ட விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்