undefined

ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து... 7 பேர் பலி; 8 பேர் படுகாயம்!

 
ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் அருகே தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ ஒன்றின் மீது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அரசு பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

தொழிலாளர்கள் அனைவரும் வாழை தோட்டம் ஒன்றிற்கு வேலைக்கு சென்று விட்டு ஆட்டோவில் தங்கள் வீட்டிற்குத் திரும்பிச் சென்றுக் கொண்டிருந்தபோது அரசு பேருந்து ஆட்டோ மீது மோதியது. 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்பு பணிகளில் ஈடுபட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!