undefined

 சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து... !

 

 சென்னையில்  கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து  கண்டெய்னர்களை ஏற்றி செல்லும்  சரக்கு ரயில் ஒன்று தண்டையார்பேட்டை ரயில் பணிமனையை நோக்கி புறப்பட்டது.  ரயில் தண்டையார்பேட்டைக்கு செல்லும் லூப் லைனில் மாறி சென்று கொண்டிருந்த நிலையில்  திடீரென சிறிது நேரத்தில் ரயிலில் இருந்த 8 மற்றும் 9வது பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரயிலின் என்ஜின் டிரைவர் விபத்து குறித்து உடனடியாக ரயில்வே  அதிகாரிளுக்கு  தகவல் கொடுத்தார்.


தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், ஊழியர்கள் உதவியுடன் தடம் புரண்ட சரக்கு ரயிலின் சக்கரங்களை மீண்டும் தண்டவாளத்திற்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயிலில் எந்த பொருட்களும் எடுத்து செல்லப்பட்டாமல் காலியாக சென்றதால் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. விபத்தால் யாரும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். திடீரென சரக்கு ரயில் தடம் புரண்டதால் திருவள்ளூர், ஆவடி, அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களில் இருந்து சென்னை கடற்கரை வந்த மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். பின்னர் ஒரு சில வழித்தடங்கள் மட்டும் சரி செய்யப்பட்டு ஒவ்வொரு மின்சார ரயில்களாக இயக்கப்பட்டது. சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தடம் புரண்ட சக்கரங்கள் மீண்டும் தண்டவாளத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதனையடுத்து சரக்கு ரயில் தண்டையார்பேட்டை பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.


சரக்கு ரயில் தடம் புரண்டது குறித்து  ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டும், விசாரணை நடத்தியும்  வருகின்றனர். சமீப காலமாக ரயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாவது ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!