undefined

தங்கம் விலை மீண்டும் உயர்வு... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.45,640 விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை உயர்வுக்கு இஸ்ரேல் போர் காரணமாக அமைந்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தங்கம் நேற்று ஒரு கிராம் 5,700 ரூபாய்க்கும், ஒரு சவரன் 45,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,705 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 45,640 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 6,175ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து, 49,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையில் இன்று 50 காசுகள் குறைந்து ரூ.77.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 77,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!