குழந்தை வரம் அருளும் கோகுலாஷ்டமி!!

 

நமது இந்து மதத்தில் எத்தனையோ விரத வழிபாடுகள் இருந்தாலும், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி திருவிழாவுக்கு தனி சிறப்பு உண்டு. கோகுலாஷ்டமி நாளில், இறைவனின் பாதங்களை, நம் வீட்டிற்குள் நுழையும் குழந்தையாய் பாவித்து வரைந்து வழிபடுகிறோம். தமிழகத்தில் எப்படி விநாயகர், நம் அனைவரின் செல்லப் பிள்ளையாக உருமாறி பிள்ளையாராய் நமக்கு மனதளவில் சக்தி தருகிறாரோ அது போல் வடக்கில் கிருஷ்ணரை அவர்களது வீட்டில் ஒருவராகவே நினைத்து உரிமையோடு வழிபடுகிறார்கள்.

நாளை செப்டம்பர் 6ம் தேதி புதன்கிழமை  இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி நாளில், கிருஷ்ணனின் நாமத்தை உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவார்கள் என்பது ஐதீகம்இந்துக்கடவுள்களில் ஒவ்வொரு கடவுளுக்கும் உகந்த நாள் உண்டு. அந்த வகையில் சிவனுக்கு சிவராத்திரி, அம்பாளுக்கு நவராத்திரி, ராமருக்கு ராமநவமி, முருகனுக்கு கந்த சஷ்டி. ஆனால் கிருஷ்ணனை மட்டும் தான் அவருடைய பெயரில் பண்டிகையாக கொண்டாடாமல், அவர் பிறந்த இடத்தையும், திதியையும் சேர்த்து கோகுலாஷ்டமியாக கொண்டாடுகிறோம்.


ஏனெனில், கிருஷ்ண பகவான் முழுவதுமே ஈஸ்வர ஸ்வரூபமாக அவதரித்தவர்.முழுமையான அவதாரமாக கிருஷ்ணரைக் கருதுவதால் அவர் பிறந்த இடத்தையும், திதியையும் வைத்து மரியாதையுடன் கோகுலாஷ்டமி என்று அழைக்கப் படுவதாக ஆன்மிக புராணங்கள் கூறுகின்றன.மதுராவில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து, துவாரகையிலே ராஜ்ய பரிபாலனம் செய்து பன்னிரெண்டு ஜோதிர்லிங்க ஷேத்திரங்களில் ஒன்றான சோமநாத் ஷேத்திரத்தில் பிரதாப பட்டம் என்ற இடத்தில் தன்னுடைய கடைசி காலத்தில் இருந்துக் கொண்டு கிருஷ்ணர் வைகுண்டம் சென்றதாக வரலாறு.

பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கள்   கேட்க வேண்டும். இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் நிச்சயம் கிடைக்கும். கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் காலையில் இருந்து ஸ்ரீமத் பாகவதம், கிருஷ்ணாஷ்டகம், கிருஷ்ணன் கதைகளைப் படிக்க வேண்டும்.

துவாதச மந்திரமான “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” எனும் மந்திரத்தை 108 முறை ஜெபித்து, மலர்களையும் பழங்களையும், இனிப்பு வகைகளையும் அவருக்கு படைத்து தூப தீபம் காட்ட வேண்டும்.வீட்டில் பூஜையும் நைவேத்தியமும் செய்து முடித்த பிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்தில் வழிபடலாம். கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் பிள்ளை பேறு வேண்டுபவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசமஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை