undefined

 ’கோட்’ திரைப்படம் முன்பதிவில் சாதனை... கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள், தொண்டர்கள்! 

 

 தமிழ் திரையுலகில் இளைய தளபதி நடிகர் விஜய்யின் ‘கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது தியேட்டர் முன்பதிவு ஜரூராக நடைபெறு வருகிறது.  வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம்  விறுவிறுப்பாக புரமோஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உட்பட பலர்  நடித்துள்ளனர்.

யுவன் சங்கர ராஜா இசையமைப்பில்  சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் படத்தை முதல் நாள் பார்க்க விஜய் ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்ற காரணத்தால் பல திரையரங்குகளும் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு டிக்கெட்டை விற்பனை நடைபெற்று வருகிறது.டிக்கெட் விலை அறிவிக்கப்பட்டு  ஆன்லைனிலேயே விற்பனை நடந்து வருகிறது.

இப்படி டிக்கெட் விலையை ஏற்றி விற்கும் திரையரங்குகளில் சென்னை ரோகினி திரையரங்கும் ஒன்று. ஆனாலும் அந்த திரையரங்கில் இதுவரை 25000 டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திரையரங்க வரலாற்றில் இதுவரை எந்தவொரு படத்துக்கும் இவ்வளவு வேகமாக டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டதில்லை என தியேட்டர் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை