undefined

சிகிச்சைக்காக சீனா சென்ற சிறுமி.. விமானத்திலேயே பரிதாபமாக பலியான சோகம்!

 

ஈராக்கைச் சேர்ந்த 16 வயது சிறுமி சிறுநீரகக் கோளாறுக்காக சிகிச்சைக்காக சீனாவுக்குச் சென்றபோது நடுவானில் உடல்நிலை பாதிக்கப்பட்டு விமானத்தில் உயிரிழந்தார். ஈராக்கில் இருந்து சீனா சென்ற ஈராக் ஏர்வேஸ் விமானம் கொல்கத்தாவிற்கு திருப்பி விடப்பட்டு அங்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது. சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு இதயத்துடிப்பு இல்லை என தெரியவந்தது. பின்னர், 16 வயது சிறுமியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தபோது, ​​அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இறந்த தேகன் அகமது தனது பெற்றோருடன் சிகிச்சைக்காக குவாங்சோவுக்குச் சென்றிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.கொல்கத்தா விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன், விமானி அவசர மருத்துவ சிகிச்சைக்காக தரையிறங்க விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரியிடம் அனுமதி கோரினார்.

விமானம் தரையிறங்கியதும், விமான நிலைய மருத்துவ அதிகாரி பரிசோதனை செய்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 16 வயது சிறுமியின் உடல் அர்கிகர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இறந்த தேகன் அகமதுவின் உடல் டெல்லி வழியாக பாக்தாத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

"பாதிக்கப்பட்ட குடும்பம் ஆங்கிலம் பேசாததால், எங்கள் அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு சிரமமாக இருந்தது. கொல்கத்தாவில் உள்ள ஈராக் தூதரக அதிகாரிகள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் எங்களுக்கு உதவினார்கள். 16 வயது சிறுமி சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்துகொண்டிருந்தார். மருத்துவ சிகிச்சைக்காக சீனா செல்ல இருந்த போது உயிரிழந்ததாக" போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!