undefined

150கிலோவில் மலைக்கோட்டை பிள்ளையாருக்கு  ராட்சத கொழுக்கட்டை!

 

 தமிழகத்தில் தென் கயிலாயமாக பக்தர்களால் கொண்டாடப்படுவது  திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில். மலைக்கோட்டையின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையாரும், மலையின் நடுப்பகுதியில் தாயுமானசுவாமி, மட்டுவார் குழலம்மையும் எழுந்து அருள் செய்து வருகின்றனர். இந்தக் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  

அந்த வகையில் இந்த வருடத்திற்கான விநாயகர் சதுர்த்தி விழா நாளை சனிக்கிழமை காலை 5 மணிக்கு கஜ பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் தாயுமானசுவாமி  மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்ட 150 கிலோவிலான ராட்சத கொழுக்கட்டையை தொட்டில் கட்டி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு தலா 75 கிலோவில் படையலிட்டு நைவேத்தியம் செய்யப்படும்.

 இந்த விழாவிற்காக 150 கிலோவில் மிகப்பிரமாண்டமான கொழுக்கட்டை தயாரிக்கும் பணிகள் மும்மூரமாக  நடைபெற்று வருகிறது. இந்த கொழுக்கட்டையை 24 மணி நேரம் ஆவியில் வேகவைத்து தயாரிப்பார்கள். தேங்காய், பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், நெய், பருப்பு ஆகிய  பொருட்களை பயன்படுத்தி இந்த ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கோவில் பணியாளர்களால் செய்யப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை