undefined

விநாயகர் சதுர்த்தி... திருநெல்வேலி வரை சிறப்பு ரயில் அறிவிப்பு.. பயணிகள் உற்சாகம்!

 
சென்னையில் இருந்து திருநெல்வேலி வரையிலும் மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து சென்னை வரையிலும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சில ரயில்கள் திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரை வரையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் குறித்த விவரங்களுக்கும், முன்பதிவுக்கும் உங்கள் அருகில் உள்ள ரயில் நிலையத்தை அணுகுங்கள். தமிழகத்தில் பண்டிகை கால கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கியிருக்கிறது. கிருஷ்ண ஜெயந்தி முடிந்த நிலையில், செப்டம்பர் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். அதே சமயம் தொடர் விடுமுறை தினங்களில் சொந்த ஊர் நோக்கி படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


பண்டிகைக் காலங்களில் சொந்த ஊரில் உறவினர்களோட கொண்டாட வசதியாக சிறப்பு ரயில்களும், பேருந்துகளும் அறிவிக்கப்படுவது வழக்கத்தில் இருந்து வருகின்றது.அந்த வகையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க நெல்லை - தாம்பரம் இடைய சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நெல்லையில் இருந்து இன்று இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06040) மறுநாள் காலை 11.25 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று மதுரை வரையிலும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருச்சி, திண்டுக்கல் வழியாக கொச்சுவேலி வரை செல்லும் சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள ரயில் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா