undefined

கடல் சீற்றம்.. மெரினாவில் கரை ஒதுங்கிய மிதவை கூண்டு!

 

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் அதிகரித்துள்ளது. வடக்கு நோக்கி நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதால், கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக உள்ளது.

இந்நிலையில், சென்னை மெரினா விவேகானந்தர் இல்லம் எதிரே உள்ள கடலோரப் பகுதியில் மிதக்கும் கூண்டு ஒன்று கரை ஒதுங்கியது. கடலில் வைக்கப்பட்டிருந்த மிதவை  கூண்டு, கடல் அலைகள் காரணமாக கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது. இது தற்போது செயல்பாட்டில் உள்ளதா அல்லது சேதமடைந்துள்ளதா என கடல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் பொதுமக்கள் அபாயகரமாக ஏறி புகைப்படம் எடுப்பதால் போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

மிதக்கும் கூண்டு குறித்து மெரினா கடற்கரை போலீசார் இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகும் வங்காள புயல் சென்னைக்கும் பரங்கிப்பேட்டைக்கும் இடையே கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்த புயல் நவம்பர் 30-ம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் சென்னையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!