undefined

த்ரிஷா ஆயில் மசாஜ் முதல் ஹன்சிகாவின் பாத்ரூம் வீடியோ வரை.. தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லை... கேரள ஹீரோயின்ஸ் துணிச்சல் தமிழில் எடுபடுமா?

 

தலைமுறை தலைமுறைகளாக திரையுலகினர் மீதான பொதுமக்களின் பார்வை திருப்தியளிக்கும் விதத்தில் கிடையாது. உண்மையில் ரூ.8 கோடி என விரல்களை உயர்த்தும் நயன்தாராவாக  இருந்தாலும் சரி... தினக்கூலி போக ரூ.1000 வாங்கும் குரூப் டான்ஸர்களில் ஒருவராக இருந்தாலும் சரி.. சினிமாவில் பெண்கள் படுகிற கஷ்டங்களை எல்லாம் அப்படி ஒரு வரியில் கடந்து விட முடியாது. திறமை, உழைப்பு என இதையெல்லாம் தாண்டி ஒரு அரசியல் சினிமாவில் சுற்றிக் கொண்டிருக்கும். குரூப் டான்ஸர்களில் கொஞ்சம் அழகாக இருந்தால் அந்தப் பெண்ணை கடைசி வரிசைக்கு தள்ளி விடுவார்கள். இதெல்லாமே நாசூக்கான அரசியல். இசையமைப்பாளர் இமான் மனைவி விவகாரத்தில் சிவகார்த்திகேயன், நடிகைகள் அமலாபால், சமந்தா, மிர்ச்சி சுசித்ரா, தொகுப்பாளர் டிடி, ப்ரியா, ரஜினியின் 2வது மகள் செளந்தர்யா என ஏகத்துக்கும் பிரபலங்களின் அல்லது பிரபலங்களின் வாரிசுகளின் விவாகரத்துக்கு ஒரு தமிழ் நடிகரின் பெயரைத் தான் மொத்த கோலிவுட்டும் உச்சரித்தது.

ஈசிஆரில் நடுரோட்டில் குடிபோதையில் அந்த ஹீரோயின் டான்ஸ் ஆடிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததும் ஒரு ஹீரோவால தான். ஆயில் மசாஜ் துவங்கி, பாட ஆசைப்பட்ட ஹீரோயின் உதட்டோடு கவ்விக் கொண்டிருந்த புகைப்படமும், ஹன்சிகாவின் அந்தரங்க புகைப்படமும் லீக்கானது எல்லாமே ஏதோ தெரியாமல் நடந்த விஷயம் கிடையாது என்கிறார்கள்.

<a href=https://youtube.com/embed/7qewq2ujSvw?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/7qewq2ujSvw/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

நான்கு சுவற்றுக்குள் நெருக்கமாக  இருக்கும் அந்தரங்க புகைப்படங்களும், வீடியோக்களும் லீக்கானது கூட பாலியல் சுரண்டல்கள் தான். மிரட்டலுக்கு அடிபணியாததும், ஒரு கட்டத்தில் உறவில் இருந்து வெளியேறுவதுமாக பெண்கள் திமிரும் போது ஆண்கள் பயன்படுத்தும் அல்லது வெளிப்படுத்தும் வக்கிர  புத்தியின் வெளிப்பாடு தான் இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியானது.

கேரவனில் ஹீரோயின்கள் உடை மாற்றுவதை ஸ்பைக் கேமிராவில் பதிவு செய்து பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் கேரள ஹீரோக்கள், அதை அப்படியே செல்போனில் பார்த்து ரசித்து விட்டு வீட்டிற்கு சென்று விடக் கூடிய அளவுக்கு நல்லவர்கள் இல்லை என்பது நிஜம் தானே? சமூக வலைத்தளங்களில் நடிகை ராதிகா ஏன் அவர்களை அப்போதே தட்டிக் கேட்கவில்லை என்கிறார்கள்? இப்போதும் சம்பந்தப்பட்டவர்களை வெளியே அடையாளம் காட்டுகிற தைரியம் தமிழ் சினிமாவில் இல்லை.

நீதிபதி ஹேமா குழுவினர் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து மலையாள திரையுலகம் சிதறு தேங்காய் போல சிதறியிருக்கிறது. மலையாள நடிகர் சங்க தலைவர் நடிகர் மோகன்லால் உட்பட 16 பொறுப்பாளர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்திருக்கிறார்கள். தினம் தினம் மலையாள நடிகைகள், பாடகிகள், ஹேர் டிரெஸ்சர், துணை நடிகைகள், கதாசிரியர்கள், டான்ஸர்கள் என்று பலரிடம் இருந்தும் புகார்கள் மலையாள திரையுலக ஹீரோக்கள், இயக்குநர்கள் மீதும் குவிந்து வருகின்றன. இந்த தைரியம் பிற திரையுலகில் இருக்கிறதா? பாதிப்படைந்தவர்களும், சாட்சியாய் நின்றவர்களும் மெளனம் கலைத்தால் தான் நிஜம் வெளியே வரும்?

மலையாள நடிகைகளுக்கு இருக்கும் தைரியம் தமிழ் சினிமாவில் இல்லை. தெலுங்கில் கூட் நடிகை ஸ்ரீரெட்டி உட்பட இரண்டு மூன்று பேர் போராடிப் பார்த்தார்கள். இப்போது வாய்ப்புகளைப் பற்றி கவலைப்படாமல் நடிகை சமந்தா, தெலுங்கு சினிமாவில் விசாரித்ததையும் வெளியே கொண்டு வாங்க என்று குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் தமிழில்? 

இப்போதும் சின்மயியைத் தான் குறை சொல்லிக் கொண்டிருக்கிறது உலகம். பாதிக்கப்பட்டதாக கதறிய சின்மயிக்கு அதன் பின்னர் வாய்ப்புகள் இல்லை. குற்றச்சாட்டுக்கு உள்ளான கவிஞர் கம்பீரமாக வலம் வருகிறார். முதல்வரை சந்திக்கிறார். பல மேடைகளில் விருதுகளை வாங்குகிறார். மூத்த அமைச்சருக்கு ரஜினியுடன் பிரச்சனை என்றதும், துண்டுச் சீட்டில்  பிரச்சனையை சமாளிக்க அடுக்குமொழியில் எழுதி தருகிறார்.  இது தான் தமிழ் சினிமா?! 

இந்த திரியை நடிகை ராதிகா கிள்ளி இருக்கிறார். ஒவ்வொருத்தராய் தனித்தனியே முயன்றால் திருத்த முடியாது... யார் யார் நடிகை ராதிகாவுடன் தைரியமாக களமிறங்க போகிறார்கள் என்று பார்க்கலாம்?!

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா