ஏட்டு முதல் தாசில்தார் வரை கள்ளக்காதல்... பேங்க் மேனஜரான மனைவியைக் கொன்ற கணவன்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமணி (32). திருமணமாகி விவாகரத்தான இவர், தன்னுடைய மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். விருத்தாசலத்தில் இயங்கி வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் இன்சூரன்ஸ் பிரிவு மேலாளராகப் பணியாற்றிய வருகிறார். இவர், அடிக்கடி ஆட்டோவில் சென்று வரும்போது உளுந்தூர்பேட்டை பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அசோக் குமார் என்பவருடன், ரமணிக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அது காதலாக மாற, கடந்த 2019-ல் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிக்கு ஒன்பது மற்றும் ஐந்து வயதில் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் புல்லூர் கிராமத்தில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இரண்டு நாள்களுக்கு முன்பு அவரது தாய் தன் மகள் ரமணிக்கு போன் செய்திருக்கிறார். அவர் எடுக்காததால் மருமகன் அசோக் குமாருக்கு போன் செய்திருக்கிறார். இரண்டு நாள்களாக இருவருமே போனை எடுக்காததால், சந்தேகமைடந்த ரமணியின் தாய், மகள் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு சடலமாக கிடந்த ரமணியைப் பார்த்து கதறி அழுதிருக்கிறார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரமணியின் சடலத்தைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்த குழந்தைகளையும் காணாததால், அசோக் குமாரின் செல்போன் எண்ணுக்கு போலீசார் போன் செய்தனர். அது அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த போலீசார், தலைமறைவாக இருந்த அசோக் குமாரை வளைத்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ரமணியை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.
போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், “என்னுடைய ஆட்டோவில் வரும்போது தான் ரமணியுடன் நட்பு ஏற்பட்டது. ரமணி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்று தெரிந்துதான் அவரை திருமணம் செய்து கொண்டேன். விருத்தாசலத்தில் பணியாற்றிய ரமணி, பெரம்பலூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனால் பெரம்பலூர் கிருஷ்ணாபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்தோம். ரமணியும், குழந்தைகளும் அங்கு இருந்தனர்.
உளுந்தூர்பேட்டையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த நான், வாரத்தில் ஒருநாள் கிருஷ்ணாபுரம் சென்று ரமணியையும் குழந்தைகளையும் பார்த்துவிட்டு வருவேன். அப்போது ரமணி வேறு சில ஆண்களுடன் பழகுவது எனக்கு தெரிய வந்தது. கடலூர் மாவட்ட குறிஞ்சிப்பாடியில் நாங்கள் இடம் வாங்கியிருந்தோம். அந்த இடத்திற்கு பட்டா வாங்குவதற்காக, குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்திற்கு சென்றிருந்தோம்.
அப்போது அங்கிருந்த துணை தாசில்தார் ஒருவருடன் பழகிய ரமணி, அவருடன் நெருக்கமானார். அது குறித்துக் கேட்டபோது, சும்மாதான் பேசுகிறேன் என்றார். ஆனால் இருவரும் நெருங்கிப் பழகியதை கண்டுபிடித்தேன். அதையடுத்து சமீபத்தில் சிறிய விபத்து ஒன்றில் சிக்கிய ரமணியை, போலீஸ் உதவி எஸ்ஐ ஒருவர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார். அதிலிருந்து அந்த எஸ்ஐயிடம் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்.
இவர்கள் தவிர போலீஸ் ஏட்டு ஒருவருடனும் நெருக்கமாக பழகி வந்தார். செல்லும் இடத்திலெல்லாம் ஆண்களுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு பேசுவது, குறித்து ரமணியிடம் கேட்டேன். அதனால் எங்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த 19-ம் தேதி நான் வீட்டிற்கு செல்லும்போது, யாரோ ஒரு ஆணிடம் ரமணி பேசிக் கொண்டிருந்தார். அப்போது நடந்த வாக்குவாதத்தில், அவளை அடித்துவிட்டு வெளியே வந்துவிட்டேன். அப்புறம் ஆண் நட்புகளுக்கு இடையூறாக இருக்கும் கணவன்களை, ஆண் நண்பர்களை வைத்தே மனைவிகள் கொலைசெய்யும் செய்திகளை அடிக்கடி பார்த்திருக்கிறேன்.
அப்படி ரமணி என்னை கொலை செய்து விடுவாளோ என்று பயந்தேன். அவளுக்கு முன்பு நான் முந்திக் கொண்டேன். லெஸ்சியில் தூக்க மாத்திரையை கலந்து எடுத்துக் கொண்டு, மீண்டும் வீட்டுக்குச் சென்றேன். சமாதானப்படுத்தி அதை குடிக்க வைத்தேன். அவள் தூங்கியதும் தலையனையை முகத்தில் அழுத்தி கொலை செய்துவிட்டு, குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா