undefined

பட்டா முதல் சிட்டா வரை... தனித்தனி ரேட்டு... சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1,85,000 லஞ்சப்பணம் பறிமுதல்!

 

நல்லாட்சி தருகிறோம் என்பவர்கள் அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதைக் கண்டுக்கொள்வதே கிடையாது. இந்த விஷயத்தில் கட்சி பேதம் எல்லாம் கிடையாது. யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுத்தாலும் மீண்டும் புதியதாய் வரும் அதிகாரியோ அல்லது அந்த இடம் காலியானதைத் தொடர்ந்து பிற ஊழியர்கள் லஞ்சம் இல்லாமல் காரியம் செய்வதில்லை. பெரும்பாலான அரசு அலுவலகங்களின் வாசலில் இருக்கும் ஜெராக்ஸ் கடைகள், பத்திரம் எழுதும் கடைகள் போன்ற சிறு கடைகள் இப்படி அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்கித் தருபவர்களாக இருந்து வருகிறார்கள். இது எல்லாம் தெரிந்தும் கவுன்சிலரோ, எம்.எல்.ஏ.,வோ, எம்.பி.யோ அட குறைந்தபட்சம் அதே அலுவலகத்தில் உயரதிகாரியாக பணிபுரிபவரோ, ஆட்சியரோ ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திடீரென ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.1,85000 பறிமுதல் செய்யப்பட்டது. இந்த அலுவலகத்தில் பட்டா முதல் சிட்டா வரை அனைத்திற்கும் தனித்தனி ரேட் வைத்து லஞ்சம் வாங்கி வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். 

கிருஷ்ணகிரி இன்ஸ்பெக்டர் பிரபு சேலம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆய்வாளர்கள் தலைமையில் சோதனை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்திற்கு நுழைவதற்கு சரியாக ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாக சார் பதிவாளர்  மோனிகா, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அலுவலகத்தில் இருந்து கிளம்பிச் சென்று ஊத்தங்கரை தனியார் மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆகி விட்டார் என்று கூறப்படுகிறது. 

இதன் பின்னரே லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனையில் ஈடுபட்டது  குறிப்பிடத்தக்கது. மேலும் கணக்கில் வராத பணம் என்று ரூபாய் 1,85,000யை அலுவலகத்தில் இருந்து கைப்பற்றினர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!