undefined

சிலிண்டர் முதல் ஆதார் வரை... நாளை முதல் நடைமுறைக்கு வரும் 11 பெரிய மாற்றங்கள்!

 

நாளை செப்டம்பர் மாதம் 1 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த 11 பெரிய மாற்றங்களைத் தெரிந்து கொள்ளுங்க.

கேஸ் சிலிண்டர் :

ஒவ்வொரு மாதமும் கேஸ் சிலிண்டர் விலையில் மாதத்தின் முதல் தேதி அறிவிக்கப்படும் மாற்றங்களுக்காக இல்லத்தரசிகள் பதைபதைப்போடு காத்திருக்கிறார்கள். கடந்த சில மாதங்களாக வர்த்தக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்து வரும் நிலையில், நாளைய அறிவிப்பில் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறையுமா என்பது இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கடந்த மாதம், வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டர்களின் விலை ரூ.8.50 அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஏடிஎஃப் மற்றும் சிஎன்ஜி – பிஎன்ஜி விகிதங்கள்:

எல்பிஜி சிலிண்டர் விலையுடன் சேர்த்து, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் விமான விசைவழி எரிபொருள் (ஏடிஎஃப்) மற்றும் சிஎன்ஜி-பிஎன்ஜி ஆகியவற்றின் விலைகளையும் அவ்வப்போது திருத்தி அமைக்கின்றன. எனவே, இந்த எரிபொருட்களுக்கான விலை மாற்றங்களும் நாளை செப்டம்பர் 1ம் தேதி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செல்போனில் விளம்பர, மோசடி அழைப்புகள் : 

விளம்பரங்கள், மோசடி அழைப்புகள், குறுஞ்செய்திகள் போன்றவைகளுக்கான விதிகள் நாளை செப்டம்பர் 1ம் தேதி முதல் கடுமையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இதுபோன்ற மோசடி செயல்களைக் கட்டுப்படுத்துமாறு ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தது. 140 என்ற மொபைல் எண்களில் தொடங்கும் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள் மற்றும் வணிகச் செய்திகளை பிளாக்செயின் அடிப்படையிலான டிஸ்ட்ரிபியூட்டட் லெட்ஜர் டெக்னாலஜி (டிஎல்டி) தளத்திற்கு செப்டம்பர் 30க்குள் மாற்ற ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் போன்ற டெலிகாம் ஆபரேட்டர்களுக்கு TRAI கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதனால் நாளை செப்.1 ம் தேதி முதல் இது போன்ற மோசடி அழைப்புகள் கணிசமாகக் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரெடிட் கார்டு : 

நாளை செப்.1ம் தேதி முதல், எச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு பயன்பாட்டு பரிவர்த்தனைகள் மூலம் ஈட்டப்படும் ரிவார்டு புள்ளிகளுக்கு ஒரு வரம்பை அறிமுகப்படுத்த உள்ளது. அதே போன்று தாமத கட்டணத்திலும் மாற்றத்தைக் கொண்டு வர உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக மாதத்திற்கு 2,000 புள்ளிகளைப் பெற முடியும். மேலும் மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் செய்யப்படும் கல்வி சார்ந்த கட்டணங்களுக்கு எச்டிஎஃப்சி வங்கி எந்த ரிவார்டு புள்ளிகளையும் வழங்காது என்று அறிவித்துள்ளது. 
அதே சமயம் நாளை முதல் கிரெடிட் கார்டுகளில் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச கட்டணத்தை குறைத்தும், பேமெண்ட் காலத்தை 18ல் இருந்து 15 நாட்களாக குறைக்கவும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் முடிவு செய்துள்ளது. மேலும், யூபிஐ மற்றும் பிற இயங்குதளங்களில் RuPay கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், பிற கட்டணச் சேவை வழங்குநர்களிடமிருந்து கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் அதே வெகுமதி புள்ளிகளைப் பெறுவார்கள்.

 

அகவிலைப்படியில் மாற்றம்: 

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (டிஏ) செப்டம்பரில் உயர்த்தி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு தற்போதைய 50% டிஏவை 53% ஆக இனி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதார் அட்டை அப்டேட்: 

ஆதார் அட்டையில் உள்ள பெயர் திருத்தங்கள், விலாசத்தில் திருத்தங்கள் போன்று புதுப்பிப்பு பணிகளை இலவசமாக மேற்கொள்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 14 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 14க்கு பின்னர், ஆதார் கார்டுகளுக்கான அப்டேட்களை இலவசமாக செய்ய முடியாது. அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். 

ஆதார் - பிஎப் கணக்கு இணைப்பு:

நாளை செப்.1ம் தேதி முதல் ஆதார் மற்றும் பிஎப் கணக்கின் UAN எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், ஆதார் - UAN இணைக்கப்படாத கணக்கிற்கு நிறுவனங்கள் தங்கள் பங்கு பிஎப் பணத்தைக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட மாட்டாது. ஆதார் - UAN இணைக்கப்படாத கணக்கிற்கு எவ்விதமான சேவைகளும் அளிக்கப்படாது என்றும் ஈபிஎப்ஓ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதார் - பான் இணைப்பு:

எஸ்பிஐ வங்கி சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய அறிக்கையில், செப். 30ம் தேதிக்குள் ஆதார் - பான் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இணைக்கப்படாத பட்சத்தில் சில பணப் பரிமாற்ற தடைகள் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. குறிப்பாக ஒரு நாளுக்கு 50,000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யப் பான் கட்டாயப்படுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் : 

GSTR-1 ரிட்டன்ஸ் கட்டுப்பாடுகள் சரக்கு மற்றும் தேவை வரிப் பிரிவு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின் படி மத்திய ஜிஎஸ்டி வரி விதி 59(6) நாளை செப்.1ம் தேதி அமலாக்கம் செய்யப்படுகிறது. இதன் மூலம் GSTR-3B தாக்கல் செய்யாதவர்கள் GSTR-1 தாக்கல் செய்ய முடியாது. இந்தப் புதிய கட்டுப்பாடு நாளை செப்.1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

காசோலை அனுமதி விதிமுறைகள்: 

ரிசர்வ் வங்கி காசோலை பணப் பரிமாற்றத்தில் பாதுகாப்பை அதிகரிக்கவும், மோசடிகளைத் தடுக்கவும் புதிய விதிமுறைகளை ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்தது. இப்புதிய விதிமுறைகள் படி அதிகத் தொகை கொண்ட காசோலைகள் பரிமாற்றம் செய்யும் முன்னர், வங்கிகள் காசோலை கொடுத்தவரின் அனுமதியைத் தனியாகப் பெற வேண்டும், ஜனவரி 1ம் தேதியே இந்த விதிமுறைகள் அமலாக்கம் செய்யப்பட்டு இருந்தாலும் இந்திய வங்கிகள் இதை நடைமுறைப்படுத்தக் கட்டமைப்புகளை உருவாகுவதற்குக் கால தாமதம் ஏற்பட்டு உள்ளது. 

ஆக்சிஸ் வங்கி இந்த புதிய விதிமுறைகளைச் நாளை செப்டம்பர் 1 முதல் அமலாக்கம் செய்யப் போவதாக தெரிவித்துள்ளது.

கார் இன்சூரன்ஸ் : 

கார் இன்சூரன்ஸ் திட்டத்தில் நாளை முதல் மாற்றங்கள் அமலுக்கு வருகிறது. நாளை செப்.1 ம் தேதி முதல் புதிய கார்களை வாங்குவோர் கூடுதலான பணத்தை இன்சூரன்ஸ் திட்டத்திற்காகச் செலவிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. 

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்குப் பின்பு நாளை முதல் கார்களுக்கு own damage coverage அதாவது பம்பர் டூ பம்பர் இண்சூரன்ஸ் பெற வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இதன் மூலம் தற்போது புதிய கார்களுக்கான டவுன் பேமெண்ட் அளவு 12,000 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா