undefined

9 நாடுகளுக்கு இலவச விசா பயணம்.. சுற்றுலாத்துறையை மேம்படுத்த சீனா வியூகம்!

 

இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பால் முடங்கியிருந்த சுற்றுலாத் துறை தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. அதன்படி, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், 9 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விசா தேவையில்லை என சீனா அறிவித்துள்ளது.

இதன் மூலம், ஜப்பான், பல்கேரியா, ருமேனியா, மால்டா, குரோஷியா, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா, எஸ்டோனியா, லாட்வியா ஆகிய நாடுகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்தார். இவ்வாறு பயணம் செய்பவர்கள் 30 நாட்கள் வரை சீனாவில் தங்கலாம். இத்திட்டம் வரும் 30ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் விசா இல்லாமல் சீனா செல்லக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!