undefined

 இன்றே கடைசி... இலவச ஆன்மிக சுற்றுலாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

 
 ஆடி மாதம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் மூத்த குடிமக்களை அம்மன் கோவில்களுக்கு கட்டணமின்றி ஆன்மீகப் பயணம் அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை  ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து  அமைச்சர் சேகர்பாபு சென்னை, தஞ்சை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லையாகிய மண்டலங்களை தலைமையிடமாகக் கொண்டு 1000 மூத்த குடிமக்கள் அம்மன் கோவில்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.  இந்த ஆன்மீகப் பயணம் ஜூலை 19, 26, ஆகஸ்ட் 2,9 தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு விருப்பம் உள்ளவர்கள் இந்து சமய அறநிலையத்துறையில் www.hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் சென்று   ஜூலை 17ம் தேதிக்குள் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி  60 வயது முதல் 70 வயதுக்குட்பட்ட 1000 பக்தர்கள் அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசு ரூ.50 லட்சம் ஒதுக்கியுள்ளது. அம்மன் திருகோயில்களுக்கு ஆடி மாதத்தில் 1000 மூத்த குடிமக்கள் கட்டணமின்றி ஆன்மிக பயணம் செல்ல உள்ளனர். சென்னை, தஞ்சை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை மண்டலங்களில் இருந்து   அம்மன் கோயில்களுக்கு செல்லும் பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.  

ஜூலை 19, 26, ஆக.8, 9 ஆகிய 4 நாட்களில் அந்தந்த மண்டலங்களில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளன. ஆன்மிக பயணம் வர தகுதியும், விருப்பமும் உடையவர்களின்  விண்ணப்பங்களை 17-ம் தேதிக்குள் இணை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை  www.hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ அறநிலையத்துறை இணையதளத்தின் மூலம்    பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத்  தெரிவிக்கபப்ட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!