undefined

 31 ஜோடிகளுக்கு இலவச திருமணம்... ரூ60000 மதிப்புள்ள சீர்வரிசை!

 

 தமிழகத்தில் இன்று அறநிலையத்துறை சார்பில் 304 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை திருவான்மியூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணம் நடத்தி வைத்தார்.  அவர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் 4 கிராம் தங்கத்தாலி, கட்டில் - மெத்தை, பீரோ, பாத்திரங்கள், மிக்ஸி, கிரைண்டர் உட்பட  ரூ.60000  மதிப்புள்ள திருமண சீர்வரிசை பொருட்களும்  மணமக்களுக்கு வழங்கப்பட்டது. 


31 தம்பதிகளுக்கும் ரூ60,000 மதிப்பிலான  சீர்வரிசை பொருட்களை வழங்கிய  முதல்வர் ஸ்டாலின் புதுமண தம்பதிகளுக்கு  வாழ்த்து தெரிவித்தார்.அந்நிகழ்வில் முதல்வர் உரையாற்றினார்.  அறநிலையத்துறையின் செயல்பாடுகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.  பக்தியை பகல்வேஷ அரசியலுக்கு பயன்படுத்துபவர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை” திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் 2,226 கோயில்களில் குடமுழக்கு நடத்தியுள்ளோம். 10,238 கோவில்களில் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு 9,000 கோயில்களில் தற்போது பணிகள் நடந்து வருகின்றன.  

 
பக்தியை சிலர் பகல் வேஷ அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர். அரசின் சாதனைகளை தடுக்கவே வழக்குகளை தொடர்ந்து வருகின்றனர். அனைவரின் உரிமைகளை காக்கும் அரசாக திமுக அரசு விளங்குகிறது. தமிழில் குடமுழுக்கு, தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதி அர்ச்சகர் என முத்தாய்ப்பான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கோயில்களில் அன்னதானம் திட்டம் மூலம் தினமும் 9000 பேர் பசியாறுகின்றனர். கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்படாமல் இருந்த தங்க முதலீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!