undefined

உஜ்வாலா திட்டத்தில் இலவச கேஸ் சிலிண்டர்... எப்படி பெறுவது? முழு விபரம்!

 

நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு சமையல் கேஸ் சிலிண்டர் இணைப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் இந்த இலவச கேஸ் சிலிண்டர்களை எப்படி பெறுவது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

பிரதமரின் உஜ்வாலா யோஜனா என்று இந்த திட்டத்திற்கு பெயர். இந்த திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2016ம் ஆண்டு மே 1ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், ஏழை மக்களுக்கு கேஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், இந்த உஜ்வாலா யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டது.

இது ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் முதல் சமூக நலத் திட்டமாகும். சேமிப்புக் கணக்குகளைத் திறப்பதற்கான ஜன்தன் யோஜனா, சுகன்யா சம்ரிதி கணக்குகள் போன்ற மற்ற அனைத்துத் திட்டங்களும் இன்றுவரை உள்ளன.

தற்போது எப்படி இலவச கேஸ் இணைப்புகளை பெறலாம் என்பதை பார்க்கலாம். முதலில், அருகிலுள்ள LPG விற்பனை நிலையத்திற்கு சென்று இலவச கேஸ் சிலிண்டருக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும். 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் இந்த இலவச கேஸ் இணைப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்பிக்கும் போது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சேமிப்பு கணக்கு பாஸ்புக், வங்கி கணக்கு அறிக்கை, இருப்பிட சான்று, பிபிஎல் சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகிய ஆவணங்களை எடுத்து செல்லவும். இந்த முக்கிய ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை இன்டேன், பாரத் கேஸ் அல்லது இந்துஸ்தான் பெட்ரோலியம் தனியார் நிறுவன கேஸ் விற்பனை நிலையத்தில் ஒப்படைத்தால் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!