undefined

 இன்று நாள் முழுவதும் அம்மா உணவகங்களில் இலவச உணவு!

 

 தமிழகத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் தொடர் கனமழை பெய்து வருகிறது.இதனையடுத்து அண்ணாசாலை, கிண்டி, அடையாறு, ஆலந்தூர், வேளச்சேரி, தரமணி, திருவானியூர், மந்தைவெளி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மெரினா  பகுதிகளில் இன்று அதிகாலை முதலே தொடர் கனமழை பெய்து வருகிறது.  

இதன் காரணமாக பல்வேறு இடங்களிலும் குடியிருப்புகளில்  மழைநீர் சூழ்ந்துள்ளது. சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  


இந்நிலையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று மக்கள் இலவசமாக உணவு அருந்தலாம் என முதல்வர்  மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கனமழையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், அவர்களுக்கு உதவும் வகையில் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இன்று ஒருநாள் இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!