undefined

போலி கையெழுத்து போட்டு 18 ஏக்கர் நிலத்தை விற்க மோசடி..  பாஜக நிர்வாகி கைது!

 

ஸ்ரீரங்கம் சுப்பிரமணியபுரம் பகுதியில் 18 ஏக்கர் பரப்பளவில் தென்னை நாற்றங்கால் உள்ளது. இதனை உரிமையாளர் ரங்கசாமி, ஸ்ரீரங்கத்தில் உள்ள பா.ஜ., விவசாய அணி மாநில நிர்வாகி கோவிந்தனிடம் குத்தகைக்கு எடுத்திருந்தார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அந்த இடத்தின் உரிமையாளர் ரங்கசாமியின் கையெழுத்தை போலியாக போட்டு ஆவணங்களை தயாரித்து தேவராஜனிடம் ரூ.19 கோடிக்கு கோவிந்தன் ஒப்பந்தம் செய்தார்.

கோவிந்தன் முன்பணமாக ரூ.5 கோடி பெற்றிருந்தார். பின்னர், கோவிந்தன் தான் பெற்ற பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல், இடத்தை பதிவு செய்ய முடியாமல் தவித்தார். இந்நிலையில், இது தொடர்பாக திருச்சி மாநகர குற்றப்பிரிவு 2ல் தேவநாதன் புகார் அளித்தார். புகாரின் பேரில், கோவிந்தனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, கோவிந்தனை கைது செய்த போலீசார், ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!