முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது வழக்கு... மீண்டும் அவகாசம் கோரியது தமிழக அரசு!

 

முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் கைது தொடர்பான புகாரை முடித்து வைத்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்பட்ட வழக்கில் மீண்டும் மீண்டும் அவகாசம் கோரும் தமிழக அரசு
கடந்த 2022ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின்  போது, திமுக பிரமுகரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஜெயக்குமார் மற்றும் அவரது மகன் ஜெயவர்தன் சார்பில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனை விசாரித்த ஆணையம், இருவரின் புகாரையும் முடித்து வைத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஜெயக்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், என்.செந்தில் குமார் அமர்வில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி  விசாரணைக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆணையம் தரப்பில் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டுமென கேட்டுகொள்ளப்பட்டது. இதற்கு ஜெயக்குமார் தரப்பு மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் என்.செந்தில் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மீண்டும் வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என ஆணையம் தரப்பில் கோரிக்கை வைக்கபட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!