பிரதமருக்காக விமானத்தை ஹைஜாக் செய்த முன்னாள் எம்.எல்.ஏ திடீர் மரணம்... அரசியல் தலைவர்கள் இரங்கல்!
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அக்டோபர் 3, 1978ல் கைது செய்யப்பட்டார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் இந்திரா காந்தி விடுவிக்கப்பட்டார். ஆனால் இந்திரா காந்தி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் 132 பேருடன் கொல்கத்தாவில் இருந்து டெல்லி சென்ற விமானத்தை தனது நண்பர்களுடன் சேர்ந்து போலநாத் பாண்டே துப்பாக்கி முனையில் கடத்தினார். பாண்டே போலி துப்பாக்கியால் விமானத்தை கடத்தி விமானத்தை நேபாளத்திற்கு கொண்டு செல்லுமாறு விமானியை மிரட்டியுள்ளார்.
ஆனால் எரிபொருள் பற்றாக்குறையால் விமானம் வாரணாசியில் தரையிறக்கப்பட்டது. இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்; சிறையில் உள்ள இந்திரா காந்தியை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது மத்தியில் ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தது. உத்தரபிரதேச முதல்வராக இருந்தவர் ராம் நரேஷ் யாதவ். பல மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, மாநில அரசு உறுதியளித்ததை அடுத்து விமானம் புறப்பட அனுமதிக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று போலநாத் பாண்டே மற்றும் அவரது நண்பர் தேவேந்திர பாண்டே இருவரும் சரண் அடைந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விமானம் கடத்தப்பட்டது தொடர்பாக போலநாத் பாண்டே மற்றும் அவரது நண்பர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், 1980ல், இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் பதவிக்கு வந்தபோது, போலநாத் மற்றும் பிறர் மீதான வழக்குகள் கைவிடப்பட்டன. பின்னர் போலநாத்துக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த அவர், தற்போது எந்த பதவியும் இல்லாமல் உடல்நலக்குறைவால் காலமானார். ஆனால், அவரது செயல்கள் இன்று வரலாறாகப் பேசப்படுகின்றன.
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!