undefined

 முன்னாள் அமைச்சர் தருமபுரி ஸ்ரீனிவாஸ் மாரடைப்பால் மரணம்... தலைவர்கள் இரங்கல்!  

 
 

முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தருமபுரி ஸ்ரீனிவாஸ், தெலுங்கானா மாநிலத்தில் இன்று அதிகாலை திடீர் மாரடைப்பால் காலமானார். 
பிரிக்கப்படாத ஆந்திராவின் சக்தி வாய்ந்த தலைவராக திகழ்ந்த தருமபுரி ஸ்ரீனிவாஸ், பல மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் நல்லுறவு கொண்டிருந்தார். 76 வயதான ஸ்ரீனிவாஸ், கடந்த சில காலங்களாகவே உடல்நலம் இல்லாமல் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று காலை மாரடைப்பால் காலமானார். 


ஒருங்கிணைந்த ஆந்திராவின் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், மூன்று முறை எம்எல்ஏவாகவும், 2009-ம் ஆண்டு ராஜசேகர் ரெட்டி அரசில் உயர் கல்வி மற்றும் இடைநிலைக்கல்வி அமைச்சராக ஸ்ரீனிவாஸ் பதவி வகித்துள்ளார்.  அத்துடன் 2016-முதல் 2022 ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பியாகவும் இருந்தார். 
ஸ்ரீனிவாஸுக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் நிஜாமாபாத் தொகுதியில் காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளார். இதற்கு முன்பாக நிஜாமாபாத் மேயராகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!