undefined

 இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் திடீர் ஓய்வு அறிவிப்பு... ரசிகர்கள் அதிர்ச்சி!

 
 

முன்னாள் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் இன்று திடீரென ஹாக்கி விளையாட்டில் இருந்து தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஹாக்கி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

ஹாக்கி விளையாட்டுடனான தனது 16 வருட பளபளப்பான வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக ராணி ராம்பால் இன்று அறிவித்தார். ஹரியானாவில் ஒரு சிறிய நகரத்தில் பிறந்து வளர்ந்த ராணி ராம்பால் தந்தை வண்டி இழுக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். 

29 வயதான ராணி ராம்பால், கடந்த 2021ம் ஆண்டு டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் நான்காவது இடம் பிடித்ததன் மூலமாக ஒலிம்பிக்கில் மகளிர் அணியை அதன் வரலாற்றில் சிறந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற சாதனைக்கு உரியவரானார். அதன்பின்னர் இந்தியாவின் மிகவும் அலங்கரிக்கப்பட்ட ஹாக்கி வீராங்கனைகளில் ஒருவராக ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். 

தனது ஓய்வு முடிவு குறித்து ராணி ராம்பால் கூறுகையில், "இது ஒரு சிறந்த பயணம். நான் இந்தியாவுக்காக இவ்வளவு காலம் விளையாடுவேன் என்று நான் நினைக்கவில்லை. நான் சிறுவயதிலிருந்தே நிறைய வறுமையைப் பார்த்திருக்கிறேன். ஆனால் எப்போதும் எதையாவது செய்ய வேண்டும், நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த 2008ம் ஆண்டு ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் 14 வயதில் சர்வதேச அளவில் ஹாக்கி விளையாட்டில் அறிமுகமான ராணி ராம்பால், இந்தியாவுக்காக 254 போட்டிகளில் விளையாடி 205 கோல்களை அடித்துள்ளார். 

2020ல் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுடன் கௌரவிக்கப்பட்டார் ராணி ராம்பால், அதே ஆண்டில் நாட்டின் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருந்தார். சப்-ஜூனியர் பெண்களுக்கான தேசிய பயிற்சியாளராக சமீபத்தில் அவர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!