முன்னாள் நிதியமைச்சர் காலமானார்!!

 

சிங்கப்பூரின் முன்னாள் நிதி அமைச்சர் ரிச்சர்ட் ஹூவு  காலமானார். இவர் தனது வாழ்நாள் முழுவதுக்கும் தேசத்திற்கான  சேவைக்கு நமது நாடு நன்றிக் கடன்பட்டுள்ளது என சிங்கப்பூர் பிரதமர்  தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ரிச்சர்ட் 16 ஆண்டுகள் சிங்கப்பூரின் நிதியமைச்சராக  பணிபுரிந்தவர். இந்நிலையில், சிங்கப்பூர் நாட்டில் மிக நீண்ட காலம் நிதியமைச்சராக இருந்தவர் என்ற பெருமையையும்  பெற்றவர்.  

இவர் நேற்று முன் தினம்  செப்டம்பர் 8ம் தேதி  வெள்ளிக்கிழமை காலமானார். இவருக்கு வயது 96.  இவருடைய மறைவு குறித்து  லீ ”  இருவரும்  1984ல் அரசியலில் நுழைந்து, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகத்தில்   இணைந்து பணிபுரிந்ததாக  தனது பதிவில் பெருமையோடு கூறியுள்ளார்.''அவரது புத்திசாலித்தனமான அறிவுரை, வலுவான உணர்வு மற்றும் சிங்கப்பூரர்கள் மீதான ஆழ்ந்த அக்கறை ஆகியவற்றை நான் எப்போதும் அன்புடன் நினைவில் கொள்வேன்" என பிரதமர் லீ கூறியுள்ளார்.  

GIC இல் - ஹு ஒரு குழு உறுப்பினராகவும், தலைவராகவும் பணிபுரிந்த  போது, சிங்கப்பூர் பிராந்திய ரியல் எஸ்டேட் சந்தையின் வளர்ச்சியை  முன்பே கணித்தவர்.   1994 ல் நிதியமைச்சராக இருந்த ஹூ தான் முதலில்  சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தினார் . "இது எங்கள் சர்வதேச போட்டித்தன்மைக்கு சவால் விடும் வகையில், பல நாடுகளும் இதையே செய்து கொண்டிருந்த நேரத்தில், வருமானம் மற்றும் பெருநிறுவன வரிகளை குறைக்க எங்களுக்கு உதவியது" என லீ  கூறியுள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை