undefined

பாஜக முன்னாள் நிர்வாகி கொடூர கொலை.. கையும் களவுமாக சிக்கிய பாஜக மாவட்ட தலைவர்.. 9 பேருக்கு வலைவீச்சு!

 

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே காவனூர் பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். இவர் பாஜக மாவட்ட விவசாய அணி முன்னாள் செயலாளராக இருந்தார். இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த மே மாதம் 8ம் தேதி இரவு, அவர் வீட்டில் இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல், மதுசூதனனை வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மதுசூதனனின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பாஜக மாவட்டத் தலைவர் பாஸ்கருக்கும், மதுசூதனனுக்கும் இடையே பணப் பட்டுவாடா தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக மாவட்டப் பொதுச் செயலாளர் செந்திலரசனின் தூண்டுதலின் பேரில் கூலிப்படையினரால் மதுசூதனன் கொல்லப்பட்டதாகவும் தெரியவந்தது. 

இதையடுத்து பா.ஜனதா பிரமுகர் பாஸ்கர், பொதுச்செயலாளர் செந்தில் அரசன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் பாஜக மாவட்ட விளையாட்டுப் பிரிவுத் தலைவர் ஜெகதீசன் மற்றும் அவரது கூட்டாளி சரவணன் ஆகியோரைக் கைது செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கரனையும் கைது செய்தனர். மேலும் பாஜக பொதுச்செயலாளர் செந்திலரசன் உள்பட 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!