undefined

முன்னாள் அதிமுக கவுன்சிலர் மகன் கல்லால் அடித்து கொலை!

 

 தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காகித பட்டறை தெருவில் வசித்து வருபவர்  வார்டு செயலாளர் பார்த்திபன். இவரது மனைவி சத்யா. பார்த்திபன் அதிமுக முன்னாள் கவுன்சிலர். இவர்களது மகன் 38 வயது ஜெய நாராயணன் எலக்ட்ரீசியன் பணிபுரிந்து வருகிறார்.  இவருக்கு மனைவி நந்தினி மற்றும் இருமகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஜெய நாராயணன் 4 பேருடன் இரவு மது அருந்திவிட்டு காகிதபட்டறை தெருவில் நடந்து சென்றார். அப்போது 2 சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி தலையில் பெரிய கல்லை தூக்கி போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டது.  


அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு வந்து பார்த்தனர்.  ஜெயநாராயணன் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி ஜெய நாராயணன் உயிரிழந்தார். போலீஸ் வழக்குப்பதிவு செய்து, மன்னார்குடி டிஎஸ்பி  தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

காகிதபட்டறை தெருவில் வசித்து வரும்  3 நபர்களை பிடித்து இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த கொலை முன்விரோத காரணமாக நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மன்னார்குடியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் மகன் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை