அடுத்த 5 நாட்களுக்கு 106 பாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்கும்... வீட்டை விட்டு வெளியே வராதீங்க!
தமிழகத்தில் வெயில் நாளுக்கு நாள் கொளுத்தி வருகிறது. பகல் நேரங்களில் ஏசி ரூமுக்குள் இருந்து கொண்டு வெளியில் வருவதே இல்லை. எல்லாமே அந்த ரூமுக்குள் தான். இரவில் சாப்பிட மட்டும் தான் வெளியே மீண்டும் வருவது. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகத்தில் பல பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 102 – 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தும்.. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த 5 நாட்களில் 36 37 டிகிரி ஃபாரன்ஹீட் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும்.
இதனையடுத்து வயதானவர்கள், இணை நோய் இருப்பவர்கள் குழந்தைகள் 11 மணி முதல் 4 மணி வரை வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வெப்பச்சலனத்தால் மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!