undefined

முதல்முறையாக தமிழில் வேத மந்திரம் ஓதி கும்பாபிஷேகம் செய்யும் பெண்கள்!

 

தமிழகத்தில் முதல் முறையாக பெண்கள் தமிழில் வேத மந்திரங்கள் ஓதும் கும்பாபிஷேகம் நாளை தஞ்சாவூர் அருகே நடைபெறுகிறது. இது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த திருபுவனத்தில் அமைந்துள்ள ஆதிசக்தி அம்மன் ஞானபீடம், இந்திய கலாச்சார அமைப்பு அறக்கட்டளை மற்றும் உலக ஆசீர்வாதம் தமிழ்ச்சித்தர் வழிபாட்டு மையம் மற்றும் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீவாலைக்குமாரி சுவாமிகள்,  மூட்டை ஸ்வாமிகள் அருள்கூட நாளை தமிழில் வேத மந்திரங்கள் ஓதும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சி ஆசீவகத் தமிழ் சித்தர் கண்ணன் தலைமையில் நடைபெறும். நேற்று நடந்த யாகசாலை பூஜையில் பெண்கள் தமிழ் வேத மந்திரங்கள் ஓதினர். மேலும், நாளை நடைபெறும் மகா கும்பாபிஷேகத்தை தமிழகத்தில் முதல் முறையாக பெண்கள் நடத்துகின்றனர். பின்னர் பச்சை வஸ்திரம் அணிந்த பெண்கள் கோயில் கருவறைக்குச் சென்று தெய்வங்களுக்கு கைகளால் அபிஷேகம் செய்வார்கள். விவசாயத்தின் அடையாளமாக பெண்கள் இந்த பச்சை நிற சேலையை அணிவார்கள்.

 இந்த குடமுழுக்கு சித்தர் முறை மற்றும் சித்தர் மரபுப்படி நடைபெற உள்ளது... இவ்விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் வேத மந்திரங்கள் ஓதி பெண்களால் கும்பாபிஷேகம் நடைபெறுவதால் தஞ்சாவூர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை