undefined

இன்று முதல் 5 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!

 

தமிழகத்தில் அக்டோபர் 6ம் தேதி  சென்னை மெரினாவில் விமானப்படை தின அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக சென்னை மெரினாவில் 5 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  

இதுகுறித்து  சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “விமானப்படை தின அணிவகுப்பு 2024 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பறக்கும் மற்றும் ஏரோபாட்டிக்ஸ் நிகழ்ச்சிகள் அக்டோபர் 6ம் தேதி  சென்னை மெரினாவில் நடைபெறவுள்ளது.  

இதில் தமிழக ஆளுநர், தமிழக முதலமைச்சர், விமானப்படை தலைவர், தலைமைச்செயலாளர், மாநில அமைச்சர்கள், இராணுவ உயரதிகாரிகள் மற்றும் மூத்த ஆயுதப்படை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.  

இதனை முன்னிட்டு ஒத்திகைகள் இன்று அக்டோபர்  1ம் தேதி செவ்வாய்க்கிழமை  முதல் அக்டோபர் 5 வரை மெரினா கடற்கரைப் பகுதியில் நடைபெறவுள்ளது. எனவே பாதுகாப்பு அலுவலின் பொருட்டு சென்னை மெரினா கடற்கரை பகுதி இன்று முதல் அக்டோபர் 6 வரை  அரசு ஏற்பாடுகள் தவிர சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து அந்த பகுதிகளில்  Remotely Piloted Aircraft Systems (RPAS)/Drone மற்றும் எந்த விதமான பொருட்களும் பறக்கவிட தடை விதிக்கப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை