ஊட்டியில் இரவில் லேசர் லைட் ஷோ... உற்சாகத்தில் நடனமாடும் குழந்தைகள்... களைகட்டும் மலர்க் கண்காட்சி!

 

 கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி கொடைக்கானல் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இவர்களை ஈர்க்க சுற்றுலாத் துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  கோடை சீசனை முன்னிட்டு உதகையில் 126வது மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது. உதகை தாவரவியல் பூங்காவில் இரவில் முதல் முறையாக நடத்தப்பட்ட லேசர் லைட் ஷோ சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. இங்கு ஒரு லட்சத்து 20000  மலர்களை கொண்டு டிஸ்னி வேர்ல்ட் முகப்பு அமைக்கப்பட்டுள்ளது . அதே போல 80000 மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள உதகை மலை ரயில் அலங்காரம் மற்றும் 35000 பூச்செடிகள்  கண்களுக்கு விருந்தாக அமைக்கப்பட்டுள்ளன.


இரவில் பூங்காவில் உள்ள மரங்கள், பழமையான கட்டிடங்கள் மின்விளக்கில் ஜொலிக்கின்றன. சிறப்பு அம்சமாக இரவு 7 மணி முதல் 9 மணி வரை புல்வெளியில் லேசர் லைட் ஷோ நடத்தப்பட்டது.இந்த ஷோவில்  லேசர் லைட் மூலம் சுதந்தர போராட்ட தலைவர்கள் தத்துரூபமாக காட்டப்பட்டனர். அதை தொடர்ந்து பல வண்ணங்களில் 3டி வடிவிலான லேசர் ஒளி மூலம் வர்ணஜாலத்தை கண்டு  குழந்தைகள் உற்சாகத்தில் நடனமாடி மகிழ்ந்தனர்.  உதகை வருபவர்கள் செல்போன் மூலம் இ-பாஸை 2 நிமிடங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம் .  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!