undefined

செவிலியருடன் உல்லாசம்.. கர்ப்பத்தை கலைத்த கேடி டாக்டர் அதிரடியாக கைது!

 

சென்னை அமைந்தகரை பகுதியில் பில்ரோத் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கௌதம் என்பவர் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருடன் ஆந்திராவை சேர்ந்த 26 வயது பெண் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இதற்கிடையில், நர்ஸ் மீது மோகம் கொண்ட மருத்துவர், அவளை காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பலமுறை கூறி அத்துமீறி நடந்து  உடலுறவு வைத்துள்ளார். இதனால், நர்ஸ்  கருவுற்றதும் கருக்கலைப்பு செய்தார்.

இதனையடுத்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செவிலியர் அளித்த புகாரின் பேரில் டாக்டர் கவுதமை போலீசார் இன்று கைது செய்தனர். சாதி காரணங்களை கூறி திருமணம் செய்ய மறுத்ததால், எஸ்சி, எஸ்டி வன்முறை பிரிவில் புகார் பதிவு செய்யப்பட்டு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!