undefined

அதிர்ச்சி... ஈசிஆர் ஹோட்டல் அறையில் 13 வயது சிறுமியுடன் உல்லாசம்... 17 வயது வடமாநில சிறுவன் கைது!

 

சென்னை ஈசிஆரில் ஹோட்டல் அறை ஒன்றில், 13 வயது சிறுமியுடன் 17 வயது சிறுவன் தங்கியிருந்து உல்லாசமாக இருந்து வந்த நிலையில், சிறுமியைத் தேடி வந்த போலீசார் சிறுவனின் செல்போன் சிக்னலை வைத்து மடக்கிப் பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் அதிகளவு நேரம் செலவழிக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

சென்னை ஈசிஆர் கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம்  பொத்தல் நகரில் 13 வயது சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பீதியடைந்த பாட்டி பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமியை காணவில்லை. இதையடுத்து நீலாங்கரை காவல் நிலையத்தில் பாட்டி புகார் அளித்தார்.

இது குறித்த புகாரின் பேரில் நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் பள்ளி அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மாணவி ஒரு சிறுவனுடன் சுமார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த சிறுவனின் செல்போன் எண்ணை போலீசார் கண்டுபிடித்தனர்.

அப்போது சிறுவன் திருவான்மியூர் அருகே உள்ள விடுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்றபோது, ​​அங்கிருந்த 3 பேரையும் கைது செய்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்த போது, ​​பெற்றோர் இல்லாத சிறுமியை மிகவும் கட்டுப்பாடாக வளர்த்து வந்ததாக தெரிகிறது.

சிறுமி குடும்ப நலன் கருதி தனது வீட்டிற்கு அருகில் உள்ள பல்பொருள் அங்காடியில் பகுதி நேர வேலை செய்து வந்துள்ளார். அப்போது, ​​அதே பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வரும் 17 வயது வடமாநில சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலித்து வந்தனர். இந்நிலையில் பாட்டி மீதுள்ள கோபத்தால் சிறுமியை மூளைச்சலவை செய்துள்ளார் சிறுவன்.

எங்காவது சென்று திருமணம் செய்து கொண்டு வேலை செய்து பிழைக்கலாம் என்பது விசாரணையில் தெரியவந்தது. சிறுவனுடன் வேலை பார்த்த ஒருவரிடம் உதவி கேட்டபோது, ​​இருவரையும் காலையில் ரயிலில் ஏற்றி அனுப்ப உதவியது தெரிய வந்தது. மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரிய வந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வடமாநில வாலிபர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா